| |

கொழும்பு தாமரைக் கோபுரத்தில் அறிமுகமாகும் சாகச விளையாட்டு!

கொழும்பு தாமரைக் கோபுரத்தின் உச்சியிலிருந்து கயிற்றின் உதவியுடன் இறங்கும் இந்த சாகச விளையாட்டு ஒன்று அறிமுகமாகவுள்ளது.

இதற்கான பரீட்சார்த்த விழா நேற்று (7) இடம்பெற்றது.

ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் கோபுரத்திலிருந்து 195 மீற்றர் உயரத்திலிருந்து கீழே இறங்கி, இந்த முன்னோட்டத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

இவ்வருடம் டிசம்பர் மாத இறுதியில் அல்லது எதிர்வரும் ஜனவரி மாத ஆரம்பத்தில் பொதுமக்களுக்குக் கிடைக்கும் எனவும் , மருத்துவ அறிக்கையொன்றை பெற்றால் மாத்திரமே இந்த சாகச அனுபவத்தில் பங்கேற்க முடியும் எனவும் தாமரைக் கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *